புலனாய்வுத்துறை அதிகாரியாக மாறிய அர்ஜுன்

Arjunஇதுவரை போலீஸ் அதிகாரியாக நடித்து வந்த அர்ஜுன், தற்போது முதன்முறையாக புலனாய்வுத்துறை அதிகாரியாக நடிக்க உள்ளார். இப்படத்தை அருண் வைத்யநாதன் இயக்க இருக்கிறார்.

இவர் தமிழில் பிரசன்னா, சினேகா நடிப்பில் வெளியான ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தையும், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘பெருச்சாழி’ படத்தையும் இயக்கியவர். மேலும் பிரசன்னா நடித்த ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தை தயாரித்தவர்.

இப்படத்தில் அர்ஜுனுடன் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், சுமன், சுஹாசினி மணிரத்னம், வைபவ், ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இதுவரை வெளிவந்த போலீஸ் கதையிலிருந்து மாறுபட்டு முதன்முறையாக புலனாய்வு துறையினை மையமாக கொண்டு அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஒரு விறுவிறுப்பு மிக்க ஜனரஞ்சகமான திரைப்படமாக உருவாக இருக்கிறது.

இப்படத்தை பேஷன் பிலிம் பேக்டரி சார்பாக உமேஷ், ஜெயராம் மற்றும் சுதன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கி தொடர்ந்து பெங்களூருவில் நடைபெறவுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online