MENUMENU

உண்மையாகி வரும் பேக் டு த பியூச்சர் படத்தின் கணிப்புகள்

2015_delorean_aஎண்பதுகளில் வெளியான அறிவியல் புனைக்கதை படமான ‘பேக் டு த பியூச்சர்’ வசூலை வாரிக்குவித்தது. டைம் மிஷின் மூலம் 1985-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டிற்கு பயணிக்கும் இப்படத்தின் முக்கிய அறிவியல் கதாப்பாத்திரங்கள் பலவும் சத்தமில்லாமல் உண்மையாகவே உயிரோட்டம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.

1985ல் இருந்து 2015 அக்டோபர் 21-ம் தேதிக்கு டைம் மிஷின் மூலம் வருவது இப்படத்தில் இடம்பெற்றிருந்தது. இதனை கவுரவிக்கும் வகையில், அதில் வரும் சில பொருட்கள் நேற்றைய தினம் வெளியாகின.

ஹாவர்போர்ட் என்கிற பறக்கும் பலகையை இந்த படத்தில் கண்டபின் அதை வாங்க வேண்டும் என கனவு காணாதவர்களே இருக்க மாட்டார்கள். இதனை ஜப்பானின் பிரபல கார் தயாரிப்பாளர்களான லெக்ஸஸ் மற்றும் கலிபோர்னியாவின் ஒரு நிறுவனமும் இணைந்து நாம் உபயோகிக்கும் வகையில் ஒரு ஹாவர்போர்டை உருவாக்கியுள்ளனர். நேற்று இதில் 11 மட்டும் முதன்முறையாக விற்பனை செய்யப்பட்டது.

நமது தினசரி வாழ்க்கையில் அங்கமாகிவிட்ட ஸ்கைப் கால்களைப் போல வீடியோ கான்பரன்சிங் முறை தற்போது பிரபலமாக உள்ளது. இதுவும் இந்தப் படத்தில் இடம்பெற்று, எண்பதுகளில் வாழ்ந்தோரின் கனவாக இருந்ததுதான்.

இந்தப் படத்தில் இரு இடங்களில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) இடம்பெற்றன. இந்த ஆளில்லா விமானங்கள் தினசரி வாழ்வில் அனைவரும் பயன்படுத்துவதாக இல்லையென்றாலும், புகைப்படங்கள் எடுப்பது போன்ற பல காரணங்களுக்கு இப்போது பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

கைகளை பயன்படுத்தாமலே, மோஷன் சென்சார் முறையில் விளையாடும் ஹேண்ட்ஸ்-ப்ரி கேமிங்கும் தற்போது சாத்தியமாகியுள்ளது.

இருபதாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வரும் 3-டி தொழில்நுட்பத்தைத் தூக்கிச் சாப்பிடுவதாக 1989-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் காட்சி இருக்கும். அதேபோல தத்ரூபமான 3-டி கொண்ட தொலைக்காட்சிப் பெட்டிகள் நம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

கூகுள் கிளாஸ் போன்ற தொழில்நுட்பத்தையும் இந்தப் படத்திலேயே காண்பித்திருப்பார் இயக்குனர் ராபர்ட் செமெக்கிஸ்.

குண்டாக, பெரியதாக இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் இப்படத்தில் வருவதுபோல, தற்போது ஒல்லியான ப்ளாட் ஸ்கிரீனுடன் நம் வீடுகளில் பயன்படுத்துகின்றோம்.

இந்தப் படத்தை மதித்துப் போற்றும் வகையில் தானாகவே நமது கால்களில் சுயமாக கட்டிக்கொள்ளும் ஷூக்களைத் தயாரிக்கும் முயற்சியில் நைக் (Nike) நிறுவனம் இறங்கியிருந்தது. நேற்று படத்தின் நாயகன் மைக்கெல் ஜே பாக்ஸ் மூலமாக அதன் முதல் ஷூவை வெளியிட்டுள்ளது.

இதில் இடம்பெற்றது போலவே வீட்டைத் திறக்க தற்போது கண்ணையோ, கைரேகையோ பயன்படுத்த முடிகிறது. அதேபோல, இதில் இடம்பெற்ற கையடக்கக் கணிப்பொறியும் (Tablet computers) நமது கைவசம் தற்போது உள்ளன. பெப்சி நிறுவனம் இதில் வரும் ‘பெப்சி பெர்பெக்ட்’ போலவே அதேபோன்ற பாட்டிலில் அடைத்து நேற்று விற்பனை செய்தது, குறிப்பிடத்தக்கது.

எனினும், முகத்துக்கு இளமையான தோற்றத்தைக் கொடுக்கும் முகமூடிகளோ, தானாகவே காய்ந்துவிடும் மேலாடைகளோ மற்றும் பறக்கும் கார்களோ நமது அன்றாட வாழ்வின் அங்கமாக இன்னும் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘த வாக்’ படத்தின் இயக்குனர்தான் பேக் டு த பியூச்சர் திரைப்படத்தின் இயக்குனருமான ராபர்ட் செமெக்கிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online