அருண் விஜய் பட இயக்குனருடன் கைகோர்த்த விஜய்சேதுபதி

Vijay-Sethupathyஅருண் விஜய் நடிப்பில் நீண்ட கால தயாரிப்பில் இருக்கும் படம் ‘வா’. இப்படத்திற்கு முதலில் ‘வா டீல்’ என்று பெயர் வைத்திருந்தனர். பின்னர், ‘வா’ என்று தலைப்பு மாற்றியுள்ளனர்.

இபப்டத்தை ரத்ன சிவஞானம் இயக்கியுள்ளார். இப்படம் வெளிவருவதற்கு முன்பே, ரத்ன சிவஞானத்துக்கு விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளிவந்த ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுதவிர, இறைவி, காதலும் கடந்துபோகும் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இருப்பினும், ரத்ன சிவஞானம் இயக்கும் புதிய படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இப்படம் காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தை விஜய் சேதுபதி தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்து மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries