வேதாளத்தின் ‘ஆளுமா டோலுமா’ பாடல் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகிறது

hqdefaultஅஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் புதிய படத்திற்கு ‘வேதாளம்’ என்று தலைப்பிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் என இப்போது பாடல்களும் வெளியாகிவிட்டது. அனிருத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளுமா டோலுமா’ படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த பாடல் கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பாடல் மேக்கிங் வீடியோவை இன்று வெளியிடப் போவதாக அனிருத் அறிவித்துள்ளார்.

இன்று மாலை 7 மணிக்கு இப்பாடல் மேக்கிங் வீடியோ வெளியிடவுள்ளனர். அஜித் படம் என்றாலே, அதைப்பற்றிய எந்த அறிவிப்பு என்றாலும் வியாழக்கிழமை அன்றுதான் வெளியாகும். அதன்படியே, இன்று வியாழக்கிழமை இதை வெளியிடவுள்ளனர்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும், அஸ்வின் கக்குமனு, லட்சுமி மேனன், தம்பி ராமையா, சூரி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தீபாவளிக்கு படம் வெளியாகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online