விஜய் படத்திலிருந்து விடை பெற்ற சமந்தா

Samanthaவிஜய் தற்போது அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். கத்தி படத்திற்கு விஜய்யுடன் சமந்தா இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்படத்தில் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து, சமந்தாவே தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்-59 குழுவுடன் இணைந்து பணியாற்றியது என்னுடைய அதிர்ஷ்டம் என்று இறுதிநாள் படப்பிடிப்பின் போது என்று அவர் கூறியுள்ளார். படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் உள்பட அனைவரிடமும் ரொம்பவும் நெகிழ்ச்சியுடன் சமந்தா விடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் படப்பிடிப்புகள் 70 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படக்குழுவுடன் எமிஜாக்சன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ராதிகா சரத்குமார், பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online