சிவி குமார் படத்தின் கதாநாயகியான டாப்சி

Tapsee-_-Hot-and-Spicy-_-Photo-Gallery-1‘அட்டக்கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘வில்லா-2’, ‘தெகிடி’ ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர் சொந்தமாக வைத்துள்ள திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து, வெளியிட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் தரமான தயாரிப்பாளராக வலம் வந்த சி.வி.குமார் தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கும் புதிய படத்தில் ‘யாருடா மகேஷ்’ படத்தில் நடித்த சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க பல நடிகைகளை பரிசீலித்து வந்த நிலையில், தற்போது, டாப்சியை ஹீரோயினாக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக ஹிட் படங்களில் நடித்து வரும் டாப்சிக்கு இந்த படமும் ஹிட் கொடுக்கும் என நம்பப்படுகிறது.

இப்படத்தில் சந்தீப் கிஷன் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். திருக்குமரன் எண்டர்டெயின்மெட் நிறுவனத்துடன் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை நவம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஜிப்ரான் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவை கவனிக்கவிருக்கிறார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries