விருதுகளை திரும்ப ஒப்படைப்பது தேவையற்றது: ஷோபனா பேட்டி

shobana_04பிரபல நடிகையும், நடன கலைஞருமான ஷோபனா தற்போது சில மலையாள படங்களில் நடித்து வருகிறார். அவரது முழு கவனமும் நடன நிகழ்ச்சிகள் நடத்துவதில் உள்ளது.

திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த ஷோபனா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது எழுத்தாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சாகித்ய அகாடமி விருதுகளை சில எழுத்தாளர்கள் திரும்ப ஒப்படைத்த பிரச்சினை பற்றி நடிகை ஷோபனா தனது கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:–

சாகித்ய அகாடமி விருதுகளை சில எழுத்தாளர்கள் மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்து வருகிறார்கள். எழுத்தாளர்கள் எதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று தெரியவில்லை. விருதுகளை திரும்ப ஒப்படைப்பதால் எந்த பிரச்சினையும் தீர போவதில்லை.

விருது வழங்கப்படும் காலத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் தகுதி வாய்ந்தவர்களை தேர்ந்து எடுத்து விருது வழங்குகிறார்கள்.

அந்த விருதுகளை கவுரவமாக கருதித்தான் நாம் பெற்றுக் கொள்கிறோம். அதன்பிறகு சில பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுகளை திரும்ப ஒப்படைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அது தேவையற்றது.

நான் சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் எனக்கு தேசிய விருது கிடைத்தது. எனக்கு மிக சரியான நேரத்தில் தான் அந்த விருது கிடைத்ததாக கருதினேன். ஒரு வேளை தாமதமாக தேசிய விருது வழங்கப்பட்டிருந்தால் அந்த விருதை நான் நிராகரித்து இருப்பேன்.

சரியான நேரத்தில், சரியான நபருக்கு விருது கிடைத்தால் தான் அதில் பலன் இருக்கும். நான் எனக்கு கிடைத்த தேசிய விருதை ஒரு போதும் திரும்ப ஒப்படைக்கமாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online