முடியால் வந்த முட்டுக்கட்டை – அதிர்ச்சியில் சிவ கார்த்திகேயன்

1445613062-8599சிவகாசி பட்டாசாக வெடித்துக் கொண்டிருந்த சிவ கார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் யானை வெடியாக அமைந்திருக்க வேண்டிய படம், ரஜினி முருகன். திருப்பதி பிரதர்ஸின் கடன்கள் காரணமாக யானை வெடி இன்னும் பத்த வைக்கப்படாமல் நமத்துக் கொண்டிருக்கிறது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார், சிவ கார்த்திகேயன். மிகுந்த பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு, வீட்டா நிறுவனத்தினர் மேக்கப் என்று படா படா ஆள்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

சிவ கார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ராஜா படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கிறார்.

மூன்று மாதத்தில் ஒரு படம் நடிக்கும் சிவ கார்த்திகேயன், இந்தப் படத்தின் முன்தயாரிப்புக்கே ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டுள்ளார். படத்தில் அவர் பெண் வேடத்தில் நடிக்க உள்ளார். அதுதான் இந்தப் படத்தின் ஹைலைட்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் நிலையில், சிகை என்ற பெயரில் ஒரு படத்தை விளம்பரப்படுத்தியுள்ளனர். இதில் கிருமி படத்தில் நடித்த கதிர் பெண் வேடத்தில் தோன்றுகிறார். அவரது பெண்வேட கெட்டப்புடன் சிகை போஸ்டரை வெளியிட்டு சிவ கார்த்திகேயன் டீமுக்கு கிலி கிளப்பிவிட்டுள்ளனர்.

நாயகன் பெண்ணாக நடிக்கும் படம்தான் இரண்டும். கதையும் ஒன்றாக இருந்தால்….? இந்த சிங்கிள் கொஸ்டின்தான் சிவ கார்த்திகேயன் முகாமில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries