10 எண்றதுக்குள்ள, நானும் ரௌடிதான் படங்களின் வசூல் நிலவரம்

1445612419-3113பண்டிகை தினத்தில் படத்தை வெளியிட்டால் சாதாரண நாளைவிட இரு மடங்கு வசூலைப் பார்க்கலாம். அந்தக்கணக்கில்தான், அக்டோபர் 21 புதன்கிழமை 10 எண்றதுக்குள்ள, நானும் ரௌடிதான் படங்களை வெளியிட்டனர்.

புதன் கிழமை பூஜை விடுமுறையில் படத்தை வெளியிட்டதால் புதன், வியாழன் என இரு தினங்கள் முதல் வாரத்தில் கூடுதலாக இந்தப் படங்களுக்கு கிடைக்கும்.

21 -ஆம் தேதி புதன் கிழமை 10 எண்றதுக்குள்ள படம் தமிழ்நாட்டில் 2.91 கோடிகளை வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. விக்ரமுக்கு இது சுமாரான ஓபனிங்தான். வேறு சிலர் படம் முதல்நாளில் 6.5 கோடிகளை வசூலித்ததாக கூறுகின்றனர். அதற்கு சாத்தியம் குறைவு. படம் 400-க்கும் குறைவான திரையரங்குகளில்தான் வெளியாகியுள்ளது.

நானும் ரௌடிதான் முதல்நாளில் 2.16 கோடிகளை வசூலித்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் தனுஷே அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படம் நன்றாக இருப்பதாக வரும் விமர்சனங்கள் படத்துக்கு கூடுதல் வசூலையும், திரையரங்குகளையும் பெற்றுத் தரும் என தனுஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online