நயன்தாராவின் அதிர்ஷ்டத்தால் கரைசேர்ந்த விஜய் சேதுபதி

1445609401-5585ஆறு தோல்விகளுக்குப் பிறகு ஒரு அசத்தல் வெற்றி கிடைத்திருக்கிறது, விஜய் சேதுபதிக்கு. நானும் ரௌடிதான் படத்தை பற்றிதான் கூறுகிறோம்.

சூது கவ்வும் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம், புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய் என ஆறு படங்கள் வரிசையாக தோல்வி. விஜய் சேதுபதியுடன் நடித்த நயன்தாராவை எடுத்துக் கொண்டால், வெற்றி மேல் வெற்றி.

இந்த வருடம் நயன்தாரா நடிப்பில் ஐந்து படங்கள் இதுவரை வெளியாகி உள்ளன. முதலில் வெளியான நண்பேன்டா, மாசு என்கிற மாசிலாமணி இரண்டும் தோல்வி. அடுத்து வந்த தனி ஒருவன், மாயா இரண்டும் ஹிட். இப்போது, நானும் ரௌடிதான் படமும் ஹிட்டாகியுள்ளது.

இந்த வருடம் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியிருக்கும் மெல்லிசை. இடம் பொருள் ஏவல் ஆகியவை வெளிவரலாம். நயன்தாராவுக்கு இது நம்ம ஆளு, திருநாள் என இரு படங்கள்.

இருவருக்கும் வெற்றி தொடருமா?

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries