மிஸ்டர் வேதாளம்… நீங்க எங்கியோ போய்டீங்க

1445080596-4295விஜய், அஜித் நடிக்கும் படங்களின் தரம், படத்துக்குப் படம் கீழிறங்குகிறது. அதேநேரம், அவர்களின் படங்களின் டீஸருக்கு கிடைக்கும் வரவேற்பு அபிரிதமாக உள்ளது. புலி ட்ரெய்லர் 60 லட்சம் ஹிட்ஸ்களை தாண்டியது. அதனை முறியடிக்கும் முனைப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது, அஜித்தின் வேதாளம் டீஸர்.

இரண்டு வாரங்கள் முன்பு வெளியான வேதாளம் டீஸர் இன்னும் சில ஆயிரம் ஹிட்ஸ்களை பெற்றால், ஐம்பது லட்சம் ஹிட்ஸ்களை தொட்டுவிடும். படம் தீபாவளிக்கு வெளிவருவதற்குள், புலியின் அறுபது லட்சம் எல்லையை வேதாளம் தாண்டிவிடும் என்கிறார்கள்.

வரும் தீபாவளிக்கு தூங்கா வனம், வேதாளம் ஆகிய இரு படங்கள் வெளியாகின்றன. இன்னும் சில தினங்களில் வேதாளத்தின் ட்ரெய்லரை வெளியிட உள்ளனர். ட்ரெய்லர் சாதனைப் படைக்க இப்போதே அஜித் ரசிகர்கள் தயார்.

படத்தையும் அப்படியே ஹிட் பண்ணிடுங்க.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online