50 இலட்சத்தை தாண்டி சாதனைப் படைத்த ‘வேதாளம்’ டீஸர்

1445692995-9457அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடித்துள்ள ‘வேதாளம்’ திரைப்படத்தின் டீஸர் 50 இலட்சத்தை தாண்டி சாதனைப் படைத்துள்ளது.

அஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. இந்த திரைப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

இதன் டீஸர், இந்த படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத் ரவிச்சந்திரனின் பிறந்தநாளான அக்டோபர் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், வெளியிட்டு 3 வாரங்கள்கூட முழுமையாக முடிவடையாத நிலையில், இந்த திரைப்படத்தின் டீஸரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளது. சனிக்கிழமை [24-10-16] மாலை 6 மணி நிலவரப்படி 50 இலட்சத்து 7 ஆயிரத்தை தொட்டது.

இதற்கு விழுந்துள்ள லைக்ஸ்கள் தமிழ் படவுலகில் யாரும் தொடாதது ஆகும். இதுவரை 1 இலட்சத்து 32ஆயிரத்து 800 லைக்ஸ்கள் விழுந்துள்ளன. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாருமாறாக எகிறியுள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries