தமன்னா இடத்தை பிடித்த ஸ்ருதிஹாசன்

Sruthi-Hasan-Thamannaவிஜய் நடிப்பில் உருவான ‘துப்பாக்கி’, அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா 2’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜமால்.

இவ்விரு படங்களிலும் இவருடைய வில்லத்தனம் அதிகமாக பேசப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவிற்கு நண்பனாக நடித்திருந்தார். தற்போது இவர் ஹீரோவாக மாறியிருக்கிறார்.

‘அஞ்சான்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் லிங்குசாமி விஷாலை வைத்து ‘சண்டக்கோழி’ படத்தின் 2ம் பாகத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.

ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமலே இருக்கிறது. இந்நிலையில், கார்த்தி-தமன்னா ஜோடியை வைத்து லிங்குசாமி இயக்கி சூப்பர் ஹிட்டான ‘பையா’ படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க முடிவு செய்திருக்கிறார்.

இதில் ஹீரோவாக வித்யூத் ஜமால் நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக தமிழில் நடித்த தமன்னாவே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தமன்னாவிற்கு பதிலாக ஸ்ருதிஹாசன் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சண்டக்கோழி 2ம் பாகம் தொடங்குவதற்கு முன்பாக வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் ‘பையா’ இந்தி பட ஷூட்டிங்கை முடிக்க திட்டமிட்டிருக்கிறார் லிங்குசாமி.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online