சித்தார்த் தயாரித்து நடிக்கும் ஜில் ஜங் ஜக்

Siddharth1சித்தார்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘எனக்குள் ஒருவன்’. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பெரிதாக பேசப்படவில்லை. இப்படத்திற்குப் பிறகு, தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை 2’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது புதிய படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அறிமுக இயக்குனரான தீரஜ் வைத்தி இயக்கும் புதிய படத்தை தனது எடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார். சித்தார்த் நடிப்பில் ஏற்கனவே வெளியான ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தையும் இந்நிறுவனமே தயாரித்திருந்தது.

முழுநீளக் காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு ‘காதலன்’ படத்தில் வடிவேலு பேசும் காமெடி வசனமான ‘ஜில் ஜங் ஜக்’ என்பதை இப்படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கின்றனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries