விக்ரமுடன் மீண்டும் கூட்டணி சேரும் பாலா

Vikram, Bala at Haridas Movie Audio Launch Stills

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘10 என்றதுக்குள்ள’. இதில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தையடுத்து ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாலா ‘சேது’, ‘பிதாமகன்’ என விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்தவர். ‘சேது’ படம் தான் விக்ரமின் வளர்ச்சிக்கு ஆரம்ப புள்ளி. இந்நிலையில், விக்ரமை சந்தித்து தனது அடுத்த படத்தின் கதாபாத்திரம் குறித்து பேசியிருக்கிறார் இயக்குனர் பாலா. முழுக்கதையையும் சொல்லாமல், அப்பாத்திரத்தின் தன்மையை மட்டும் விக்ரமிடம் விளக்கியிருக்கிறார்.

இப்பேச்சுவார்த்தையில் இரண்டு தரப்புமே ஆர்வமாய் இருப்பதால், விரைவில் இணைந்து படம் பண்ணுவார்கள் என்று கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries