10 எண்றதுக்குள்ள – படம்தான் குழப்பம்னா வசூலுமா…?

1445666422-787810 எண்றதுக்குள்ள படம் முதல் நாளில் 6.5 கோடிகளை வசூலித்தது என படத்தை தயாரித்த, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை மறுத்து, படம் 2.92 கோடிகள்தான் வசூலித்தது என இன்னொரு தகவலும் இணையத்தில் உலவுகிறது.

இதில் எது உண்மை என்று தெரியாத நிலையில், 10 எண்றதுக்குள்ள 2.92 கோடிகள் வசூலித்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ ட்வீட் செய்தார் தனுஷ். அதனைத் தொடர்ந்து, வசூல் விவரங்களை விவரமாக தெரிந்து கொண்டு பேசுங்கள் என்று 10 எண்றதுக்குள்ள படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்த ரீ ட்விட்டை தனுஷ் டெலிட் செய்தார்.

சரி, 10 எண்றதுக்குள்ள படத்தின் முதல் நாள் வசூல் 2.92 கோடிகளா இல்லை 6.5 கோடிகளா? படத்தை மாதிரியே வசூலும் குழப்பமாகத்தான் இருக்கு.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online