லாரன்சுடன் ஜோடி சேரும் நிக்கி கல்ராணி?

nikki-galrani-talks-about-her-experience-playing-a-cop-in-the-ezhil-film-photos-pictures-stillsசமீபத்தில் லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘காஞ்சனா 2’ படம் சூப்பர் ஹிட்டானது. அவர் இயக்கிய ‘முனி’, ‘காஞ்சனா’ ஆகிய வெற்றி படங்கள் வரிசையில் ‘காஞ்சனா 2’ படமும் அமைந்தது.

பேய் படமாக வெளியான இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. பேயாக நடித்து வந்த லாரன்ஸ் தற்போது முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

ஜீவா நடிப்பில் வெளியான ‘சிங்கம் புலி’ படத்தை இயக்கிய சாய் ரமணி இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க லாரன்ஸ் ஒப்பந்தமாகியிருக்கிறார். போலீசாக நடிக்கும் லாரன்சுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நிக்கி கல்ராணி, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ படத்தில் பேயாக நடித்தவர். தற்போது இவரது நடிப்பில் ‘கோ 2’ படம் வெளியாக இருக்கிறது.

லாரன்ஸ்- நிக்கி கல்ராணி ஜோடியாக நடிக்க இருக்கும் படம் முழுமையான பொழுதுபோக்கு படமாக உருவாக்க இருக்கிறார்கள். இப்படம் பற்றிய முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online