சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த பிணத்துக்கு அருகே நடித்த வடிவுக்கரசி

1445855120-5658ஆலயம், தம்பி வெட்டோத்தி சுந்தரம் போன்ற படங்களை இயக்கிய, வடிவுடையானின் புதிய படம், சவுகார்பேட்டை. தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றபடி பேய்ப் படமாக சவுகார்பேட்டை தயாராகிறது. ஸ்ரீகாந், ராய் லட்சுமி நடிக்கும் இந்தப் படத்தில் வடிவுக்கரசிக்கு முக்கியமான வேடம்.

முதல் படம் ஆலயத்திலேயே, காசிக்கு சென்று அங்குள்ள முரட்டு சாமியார்கள் மத்தியில் படப்பிடிப்பை நடத்தினார் வடிவுடையான். தம்பி வெட்டோத்தி சுந்தரம் இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ரவுடியை பற்றியது.

களம் எல்லாம் சரியாகத்தான் பிடிக்கிறார். வைக்கிற அடவுகள்தான் தப்பிப் போகிறது.

சவுகார்பேட்டையில் வடிவுக்கரசி சம்பந்தப்பட்ட ஒரு காட்சியை நள்ளிரவில் சுடுகாட்டில் பிணம் எரிந்து கொண்டிருந்தபோது எடுத்திருக்கிறார். வடிவுக்கரசியை வெறும் தரையில் படுக்க வைத்து காட்சியை யதார்த்தப்படுத்த ரொம்பவே முயன்றிருக்கிறார்கள்.

படத்தின் வெற்றியில் இவை பிரதிபலிக்குமா என்பதுதான் முக்கியமான கேள்வி.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online