நவம்பர் 27 திரைக்கு வரும் ரஜினி முருகன்…?

1445854287-7399திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் சிவ கார்த்திகேயன் நடித்துள்ள, ரஜினி முருகன் நவம்பர் 27 -ஆம் தேதி திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பதி பிரதர்ஸின் கோடிக்கணக்கான கடன்கள் காரணமாக, ரஜினி முருகன் இன்னும் வெளியாகாமலே உள்ளது. ஈராஸ் நிறுவனத்துக்கு திருப்பதி பிரதர்ஸ் பெருமளவு பணம் தர வேண்டியிருப்பதால், அந்நிறுவனம் ரஜினி முருகனின் வெளியீட்டுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

தற்போது ஈராஸுக்கு தரவேண்டியதில் பெருமளவு பணத்தை திருப்பதி பிரதர்ஸ் செட்டில் செய்துவிட்டதாகவும், மீதியை ரஜினி முருகன் வெளியானதும் செட்டில் செய்வதாக திருப்பதி பிரதர்ஸ் உறுதி அளித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். உதிரி கடன்களை அடைப்பதில் இப்போது திருப்பதி பிரதர்ஸ் தீவிரமாக உள்ளது.

கடன்கள் விரைவில் செட்டில் செய்யப்படும் சூழல் இருப்பதால், நவம்பர் 27 -ஆம் தேதி ரஜினி முருகன் திரைக்கு வரலாம் என நம்பப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries