என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகம் – ராஜ்கிரண் நம்பிக்கை

1445852567-8845ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு படம், ஒட்டு மொத்த மக்களின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும். ராஜ்கிரண் நாயகனாக நடித்த, என் ராசாவின் மனசிலே படத்தை மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று கண்டுகளித்தனர். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஓடாத படங்களுக்கே இரண்டாம் பாகம் வரும்போது, என் ராசாவின் மனசிலே பட்டிதொட்டியெங்கும் வெற்றிகரமாக ஓடிய படம். அதன் இரண்டாம் பாகம் ஏன் இன்னும் தயாராகவில்லை?

கதை இன்னும் சரியாக அமையவில்லை என்று காரணம் சொல்கிறார், ராஜ்கிரண். “எனக்கு எந்தக் கதையிலும் சீக்கிரத்தில் திருப்தி வராது. என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாவது பாகம் எனும்போது, கதையில் திருப்தி முக்கியம். விரைவில் படத்தை ஆரம்பிப்பேன்” என்கிறார் நம்பிக்கையுடன்.

என் ராசாவின் மனசிலே படத்தில் மீனா இறந்து போவதுபோல் கதை இருக்கும். எனினும், இரண்டாவது பாகத்தில் மீனா நடிப்பதற்கான வாய்ப்பு இருக்கு என்றார் ராஜ்கிரண்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries