தீபாவளிக்கு கமல், அஜித் படங்கள் நேரடி மோதல்

1445932424-4023தீபாவளிக்கு தூங்கா வனம் வெளியாவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. தீபாவளி வெளியீடு என யுஎஸ் விநியோகஸ்தர்கள் ஏற்கனவே விளம்பரப்படுத்திவிட்டனர். அஜித்தின் வேதாளம் தீபாவளிக்கு வெளியாவதும் உறுதியாகியுள்ளது.

தூங்கா வனம் ஓர் இரவில் நடக்கும் கதை. அதுவும் ஒரு நைட் கிளப்பில் நடக்கும் கதை. படத்தின் ஆரம்பத்தில் ஒன்றிரண்டு காட்சிகள் மட்டும் பகலில் வெளியிடத்தில் நடக்கும். முழுக்க த்ரில், ஆக்ஷனால் பொதியப்பட்ட, காதலுக்கும், காமெடிக்கும் இடமில்லாத படம். சின்னதாக அப்பா – மகன் சென்டிமெண்ட் மட்டும் உண்டு.

வேதாளம் தூங்கா வனத்தைப் போலன்றி காதல், மோதல், சென்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்துகட்டிய கதம்ப மாலை. குடும்பப் பார்வையாளர்களுக்கான காதாம் அல்வா.

இரண்டு பெரிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகின்றன. ஜெயிக்கப் போவது யார் என்பதே ஒரு த்ரில்தான்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries