மலேசியா முருகன் கோவிலில் கபாலி படப்பிடிப்பு

Rajinikanth-Arrived-In-Malaysia-For-Kabali-Shooting-Stillsரஜினி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘கபாலி’. ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, அடுத்தக்கட்டமாக மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். இதற்காக, படக்குழு அனைவரும் மலேசியா சென்றுள்ளனர்.

மலேசியாவில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ள படக்குழுவினர், மலேசியாவில் புகழ்பெற்ற முருகன் கோவிலிலும் முக்கியமான காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக, முறையான அனுமதி கடிதம் பெறப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 4-ந் தேதி அந்த ஆலயத்தில் முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளனர்.

‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், ரித்விகா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online