விருதுகளைக் குவித்து வரும் கோபக்கார இந்திய தேவதைகள்: டிரெய்லர்

151363டெல்லியில் ஓடும் பேருந்துக்குள் இளம்பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான சம்பவத்தின் தாக்கம் இன்றளவும் சமூகத்தை விட்டு அகலவில்லை என்பதற்கு சிறார் பாலியல் குற்றவாளிகளின் ஆண்மைத்தன்மையை நீக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேற்றைய பரிந்துரையும், அது குறித்து தொடரும் விவாதங்களுமே எடுத்துக்காட்டு.

இது போன்ற வன்கொடுமைகளுக்கான எதிர்வினையாகவும், சுதந்திரத்தை விரும்பும் பெண்களை சமூகம் எதிர்கொள்ளும் விதம் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள இந்தி திரைப்படம்தான் ‘ஆங்க்ரி இன்டியன் காஜ்ஜஸ்’.

குஜராத்தைச் சேர்ந்த பான் நலின் என்பவரது இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப்படம், அண்மையில் நடந்த டொரண்டோ பிலிம் பெஸ்டிவலில் பங்கேற்று Grolsch People’s Choice Award என்ற விருதையும் கூடவே சர்வதேச ரசிகர்களின் பெரும் வரவேற்பையும் பெற்றது.

இந்நிலையில், 10-ம் ஆண்டு ரோம் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு, BNL People’s Choice Award என்ற விருதையும் தற்போது வென்றுள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries