பதறாமப் படிங்க… ஐம்பது பேய்களுடன் ஒரு அமானுஷ்ய கிளைமாக்ஸ்

1446043214-8553இயக்குனர் வடிவுடையான் சொல்வதை கேட்கும் போது கோஹினூர் வைரம் மாதிரி தோன்றும். அதையே படத்தில் பார்க்கையில் கோவணத்துண்டு மாதிரியிருக்கும். முதல் படம் ஆலயம் தொடங்கி இந்த ஏமாற்றம் தொடர்கிறது.

இப்போது இயக்கிவரும், சவுகார்பேட்டை படம் குறித்தும் அப்படித்தான். சுடுகாட்டில் பிணத்துக்கு அருகில் நடித்தார் வடிவுக்கரசி, ராய் லட்சுமியைப் பார்த்து பேயே மிரண்டுடிச்சி என்றெல்லாம் எடுத்துவிடும் கதைகள் கேட்க சுவாரஸியம். படத்தில் எப்படியோ? இருந்தாலும் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டுமல்லவா.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸை பேய் மாதிரி உழைத்து எடுத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஐம்பது பேய்கள் வருகின்றனவாம் கிளைமாக்ஸில்.

பிரைன் டெட் என்றொரு ஆங்கில பேய் படம் முன்பு வெளிவந்தது. டைட்டில் முடிந்ததிலிருந்து பேய்களாக வந்து கொண்டிருக்கும். கால்குலேட்டரில் கணக்குப் போட்டால் கால்குலேட்டரே வெடித்துவிடும். அந்தளவுக்கு எண்ண முடியாத பேய்கள்.

பிரைன் டெட் படத்தில் எத்தனை பேய்கள் வருகின்றன என்பதை சரியாகச் சொன்னால் பரிசு என்று அறிவித்தார்கள். நமக்குத் தெரிந்தவரை யாரும் பரிசு வாங்கவில்லை. அவ்வளவு பேயை எவன் எண்ணுவது.

அப்படியொரு போட்டி சவுகார்பேட்டைக்கும் வைக்கலாம். படம் பார்க்கிறவன் எண்ணியே சாகட்டும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online