இது நம்ம ஆளு ரிலீஸ் விவகாரம்: தயாரிப்பாளருக்காக காத்திருக்கும் பாண்டிராஜ்

Idhu Namma Aalu Movie Exclusive Still - Simbu Nayanatara Hugging Photo and Romantic Pic (2)பாண்டிராஜ் இயக்கத்தில் ‘பசங்க 2’ விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போது இவர் விஷாலை வைத்து ‘கதகளி’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். இவ்விரு படங்களுக்கு முன்னதாகவே சிம்பு-நயன்தாராவை வைத்து ‘இது நம்ம ஆளு’ என்னும் படத்தை இயக்கி வந்தார். இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரித்துள்ளது.

காதலில் பிரிந்த சிம்புவும் நயன்தாராவும் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடிப்பதால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து சிறிது நாட்களிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது.

ஆனால் படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் பலரும் படம் எப்போது வெளியாகும் என்று பாண்டிராஜ்ஜிடம் கேட்டு வருகின்றனர்.

இதற்கு பதலளித்த பாண்டிராஜ், ‘என்னுடைய தரப்பில் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கான வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டேன். டிரைலர் பணிகள் கூட முடிந்து விட்டது.

படத்தின் இசை வெளியீட்டு தேதியை அறிவிக்கும் உரிமை என்னிடம் இல்லை. அனேகமாக நவம்பர் மாதம் படத்தின் பாடல்களும் டிசம்பர் மாதம் படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன். இதை தயாரிப்பாளர்தான் முடிவு செய்ய வேண்டும். உங்களை போல நானும் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கிறேன்’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online