உதயநிதிக்கு பை சொன்ன ஏமி ஜாக்சன்

1446101871-2089தலைப்பைப் படித்து என்னவோ ஏதோ என்று பதறியிருப்பீர்களே? படம் முடிந்தது பட்சி டாட்டா சொன்னது, அவ்வளவுதான் விஷயம்.

ஐ படத்துக்குப் பிறகு உதயநிதியுடன் கெத்து, தனுஷுடன் தங்கமகன் என இருபடங்களில் கமிட்டானார் ஏமி ஜாக்சன். அடுத்து விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்திலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் கெத்து படத்தை திருக்குமரன் இயக்கினார்.

படத்தின் பாக்கி போர்ஷன் ஏற்கனவே முடிந்த நிலையில், பாடல் காட்சிகளும் தற்போது முடிந்துவிட்டன. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஏமி ஜாக்சன் குறிப்பிட்டுள்ளார். உதயநிதியையும், டீமையும் ரொம்பவே மிஸ் செய்வதாகக்கூறி, பை சொல்லியிருக்கிறார்.

சிங் இஸ் பிளிங் வெற்றியைத் தொடர்ந்து இந்தியிலும் ஏமி ஜாக்சனுக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries