தம் அடிக்கும் சமந்தா: எதிர்ப்பு தெரிவிக்கும் விநியோகஸ்தர்கள்

1446099404-594910 எண்றதுக்குள்ள படத்தில் புகைப்பிடிக்கும் காட்சியில் சமந்தா நடித்துள்ளார். இந்த காட்சிக்கு பட விநியோகஸ்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

விக்ரம்,சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 10 எண்றதுக்குள்ள. இப்படத்தில் சமந்தா நாயகி மற்றும் வில்லி என இரு வேடங்களில் நடித்துள்ளார். வில்லி பாத்திரத்திற்காக அவர் புகைப்புடிப்பதுபோல் நடித்துள்ளார்.

அதுவும் சிகரெட்டின் புகையை மூக்கின் வழியாக விடுவார். இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ஆனால் இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த காட்சிகளின் புகைப்படங்களை ரசிகர்கள் திருட்டு வீசிடிகளிலிருந்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்களை தொகுத்து நடிகை சமந்தா தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு விநியோகஸ்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமந்தாவின் நடவடிக்கை திருட்டு வி.சி.டியை ஊக்குவிப்பது போல் உள்ளது என்று கூறியுள்ளனர். இது குறித்து திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க முன்னாள் தலைவர் கலைப்புலி சேகரன் கூறுகையில்,

புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்படுகின்றன. ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் புகைபிடிக்கும் காட்சியில் நடிப்பது இல்லை என்று முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் சமந்தா புகைபிடிக்கும் காட்சியில் நடித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.

அது படத்தோடு முடிந்துவிட்டது என்று நினைத்தால் திருட்டு வி.சி.டியில் இருந்து எடுத்து வெளியிடப்பட்ட அந்த புகைபிடிக்கும் படங்களை சமந்தா தனது ட்விட்டரில் வெளியிட்டு பெருமைபடுகிறார். இது பெண்களை புகைபிடிக்கும் பழக்கத்துக்கு தூண்டுவது போல் உள்ளது என்று கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online