ஜிவி இசையில் செல்லாக்குட்டி என கொஞ்சும் விஜய்

86748475-9d03-49b1-b494-2d8ecf449314OtherImageவிஜய் சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடல் பாடுவதை வழக்கமாக கொண்டு வருகிறார். இவர் பாடுகின்ற பாடல்கள் அனைத்தும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வரிசையில் தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்திலும் விஜய் பாடப்போவதாக செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில், சமீபத்தில் அந்த படத்துக்கான ஒரு பாடலை விஜய் பாடியுள்ளார்.

‘செல்லாக்குட்டி’ என்று தொடங்கும் அந்த பாடல் ரொமான்ஸ் கலந்த குத்துப்பாடலாக உருவாகியிருக்கிறதாம். இந்த படத்தில் மொத்தம் இரண்டு பாடல்களை விஜய் பாடவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries