வருகிறது மத கஜ ராஜா

1446208232-6938சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்த மத கஜ ராஜா படத்தை மீண்டும் தூசி தட்டி வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

நடிப்பைத் துறந்து, முழுநேர இயக்குனர் பணியில் இறங்கிய சுந்தர் சி. யின் முதல் படமாக வெளிவந்தது கலகலப்பு. படம் மாபெரும் வெற்றி. அதைத் தொடர்ந்து விஷால், வரலட்சுமி, அஞ்சலி நடிப்பில் மத கஜ ராஜா படத்தை இயக்கினார்.

படம் முடிந்து பல வருடங்கள் ஆகியும் வெளியாகவில்லை. தயாரிப்பாளரின் கடன் பிரச்சனையால் படம் வெளியாவது இன்னும் சாத்தியமாகவில்லை. நடுவில், விஷால் தனது சொந்தப் பணத்தில் படத்தை வெளியிட முயற்சி செய்தும் நடக்கவில்லை.

இந்நிலையில், மதன் கஜ ராஜாவின் தயாரிப்பாளர்கள் கடனை செட்டில் செய்து மத கஜ ராஜாவை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

தீபாவளிக்குப் பிறகு படம் வெளிவர வாய்ப்புள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online