வேதாளம் படத்திற்கு யு சான்றிதழ்

VEDALAMஅஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வேதாளம்’. இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசனும் தங்கையாக லட்சுமிமேனனும் நடித்துள்ளார்கள்.

மேலும் கபீர் சிங், ராகுல் தேவ், அஸ்வின், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இவருடைய இசையில் சமீபத்தில் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இப்படத்தின் டீசர் யூடியூப்பில் புதிய சாதனை படைத்து வருகிறது.

இப்படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் இன்று தணிக்கைக் குழுவிற்கு அனுப்பபட்டிருக்கிறது.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியிருக்கின்றனர். இது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் திட்டமிட்டபடி ‘வேதாளம்’ படம் தீபாவளிக்கு வரவிருக்கிறது. கூடிய விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online