விருதை திருப்பித்தர மாட்டேன – நான் தமிழச்சி என்பதை நிரூபித்த வித்யா பாலன்

1446203527-4788மோடி அரசில் இந்து அடிப்படைவாதிகள் கட்டவிழ்க்கப்பட்ட மதயானைகளைப் போல் ஜனநாயகத்தின் பன்முகத்தன்மையை குத்திக் கிழிக்கிறார்கள். இந்த அநீதிக்கு எதிராக எழுத்தாளர்கள், திரைப்பட கலைஞர்கள் தங்களுக்கு கிடைத்த விருதுகளை திருப்பி அளித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் எந்த அனக்கமும் இல்லை. இயக்குனர் அருண்மொழி மட்டும், தனது ஏழாவது மனிதன் திரைப்படத்துக்காக கிடைத்த தேசிய விருதை திருப்பித் தந்திருக்கிறார்.

மற்ற எழுத்தாளர்கள்? விருதை திருப்பித் தருகிறவர்கள் விளம்பர ஸ்டண்ட் செய்கின்றனர் என்று மானமுள்ள எழுத்தாளர்களை கிண்டல் செய்து சோரம் போய்க்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், வித்யா பாலனிடம் இது குறித்து கூட்டம் ஒன்றில் பேசினார்.

“நடக்கும் சம்பவங்களை கண்டித்து நான் தேசிய விருதை திரும்ப கொடுக்க மாட்டேன். இது நாட்டு மக்கள் தான் எனக்கு கொடுத்தார்களே தவிர, அரசு அல்ல’’ என்று கூறினார்.

2012 -ஆம் ஆண்டு, த டர்ட்டி பிக்சர் படத்துக்காக வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. வித்யா பாலன் அடிப்படையில் ஒரு தமிழர்.

அதானே பார்த்தோம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online