அனுஷ்காவை தேடி வரும் ராணி கதாபாத்திரங்கள்

1446202880-3575சரியாகச் சொன்னால், அருந்ததி படத்தில் தொடங்கியது அனுஷ்காவின் ஆதிக்கம். அவரது நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், அருந்ததி படத்தில் அவர் ஏற்று நடித்த அருந்ததி கதாபாத்திரத்தை இரண்டு மாநிலங்களில் வெற்றி பெறச் செய்தது.

அதையடுத்து பாகுபலியில் ராணியாக நடித்த அனுஷ்கா ருத்ரமாதேவியிலும் ராணியாக கலக்கினார். அவரைத்தேடி வரும் ராணி வேடங்கள் நிற்பதாயில்லை.

சரித்திர பின்னணி கொண்ட பகமதி ராணியாக இவரை வைத்து படம் எடுக்க தெலுங்கு இளம் இயக்குனர் ஜி.அசோக் முன் வந்திருக்கிறார்.

இதற்கான கதையை அனுஷ்காவிடம் அவர் சொல்லி நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். கதையும் அதில் வரும் ராணி பாத்திரமும் பிடித்துவிட்டதால் அனுஷ்கா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இப்போது பாகுபலி 2 –இல் நடிக்க இருப்பதால் உடனே இந்த படப்பிடிப்பு நடைபெற வாய்ப்பு இல்லை. பாகுபலி படப்பிடிப்பு முடிந்த பிறகு மற்றொரு ராணியாக நடிக்க அனுஷ்கா தயார் ஆகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries