இது நம்ம ஆளு கிடையாது – கைகழுவிய பாண்டிராஜ்

1446171522-65இது நம்ம ஆளு படம் எப்போது வரும் என்ற கேள்வியை படம் முடிந்ததிலிருந்து எதிர்கொண்டு வருகிறார், பாண்டிராஜ்.

பதில் சொல்லி அவருக்கு சலித்திருக்கும். கடைசியாக இன்னொருமுறை அதுபற்றி ஒரு கைகழுவல் பதிலை சொல்லியுள்ளார்.

இது நம்ம ஆளு படத்தில் நான் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டேன். எடிட்டிங் டப்பிங் எல்லாம் முடிந்து படம் தயார்.

எப்போது படம் திரைக்கு வரும் என்று உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன். அதை முடிவு செய்ய வேண்டியது தயாரிப்பாளர்தான் என கூறியுள்ளார்.

பாண்டிராஜ் வேலையில் ரொம்ப வேகம். இது நம்ம ஆளு படத்தை சிம்பு தொங்கலில் விட்டபோது, பசங்க 2 படத்தை இயக்கி முடித்தார். அப்படம் விரைவில் வெளிவர உள்ளது.

அதையடுத்து விஷாலை வைத்து, கதகளி படத்தை தொடங்கி இறுதிகட்டத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்.

இதற்கெல்லாம் முன்னால் தொடங்கிய இது நம்ம ஆளு இன்னும் திரைக்கு வராமலிருப்பதற்கு சிம்பும், படத்தின் இசையமைப்பாளரான அவரது தம்பியுமே காரணம் என்கிறார்கள்.

இதை கொஞ்சம் சத்தமாகச் சொன்னால், டிஆர் அவதூறு வழக்கு போட்டாலும் போடுவார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online