விஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்

10468084_342203242614692_2842766594891582636_nவிஜய் ‘புலி’ படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் ‘செல்லாகுட்டி’ என்னும் பாடலை விஜய் சமீபத்தில் பாடினார். போலீஸ் கதையாக உருவாகும் இப்படத்திற்கு ‘காக்கி’ என தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தையடுத்து தன்னுடைய அடுத்த பட இயக்குனரைத் தேர்வு செய்வதில் விஜய் மிகவும் கவனமாக உள்ளாராம். ஏற்கெனவே விஜய்யிடம் சில முக்கிய இயக்குனர்கள் கதையைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவற்றில் எதைத் தேர்வு செய்யப் போகிறார் என்பது தான் இன்னும் சஸ்பென்சாகவே உள்ளது.

குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா, சசிகுமார், தனி ஒருவன் படத்தை எடுத்த மோகன் ராஜா, ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன், ‘சிங்கம்’ படத்தை இயக்கிய ஹரி ஆகியோர் விஜய்யிடம் கதை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களில் யாரை தேர்வு செய்வார் என்று அட்லி இயக்கி வரும் படத்தை முடித்த பிறகு தான் தெரியும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries