98 நிமிடங்கள் ஓடும் மணிகண்டனின் குற்றமே தண்டனை

1446279358-4359மணிகண்டனின் காக்கா முட்டை தமிழ் சினிமாவுக்கு முக்கியமான திரைப்படம். வழக்கமான கமர்ஷியல் பட ஃபார்முலாவை இந்தப் படம் உடைத்தது. அவரது இரண்டாவது படம், குற்றமே தண்டனையும் அதேபோன்றே உருவாகியுள்ளது.

முதலாவதாக, இப்படம் இரண்டரை மணிநேரங்கள் எல்லாம் ஓடப் போவதில்லை. மொத்த படமே 98 நிமிடங்கள்தான். படத்தில் பாடல்கள் இல்லை என்பது இன்னொரு முக்கியமான அம்சம். இளையராஜா படத்தின் பின்னணி இசையை அமைத்திருக்கிறார்.

ஒரு கொலையையும் அதனையொட்டி நடக்கும் சம்பவங்களையும் வைத்து இந்தப் படம் தயாராகியுள்ளது. விதார்த் படத்தை தயாரித்து முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

அவருடன் நாசர், ரகுமான், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். மணிகண்டனே படத்தின் ஒளிப்பதிவையும் செய்துள்ளார். விரைவில் வெளிவரவிருக்கும் இப்படம் மும்பை மற்றும் கேரளா சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries