விஜய் சேதுபதி படத்தில் நம்பிக்கையான இளம் இசையமைப்பாளர்

VijaySethupathiவிஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘நானும் ரௌடிதான்’.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

விஜய் சேதுபதி கைவசம் நிறைய படங்கள் இருக்கிறது. ‘மெல்லிசை’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. மேலும் ‘இறவி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தனுஷ் தயாரிக்கும் புதிய படம், காக்காமுட்டை மணிகண்டன் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார்.

விஜய் சேதுபதி படங்களில் இளம் இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் ‘காக்காமுட்டை’ மணிகண்டன் இயக்க இருக்கும் படத்திற்கு கே இசையமைக்க இருக்கிறார். இவர் இசையில் சமீபத்தில் ‘கிருமி’, ‘கள்ளப்படம்’, ‘49 ஓ’ ஆகிய படங்கள் வெளியானது.

மணிகண்டன் இயக்கிய ‘காக்காமுட்டை’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இவர் தற்போது இயக்கி வரும் ‘குற்றமே தண்டனை’ படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries