வரிசை கட்டி நிற்கும் விஜய் பட இயக்குனர்கள்

Vijayஎன்னதான் புலி புரண்டாலும், விஜய் படத்தை இயக்க இன்னும் ஆவலாகத்தான் உள்ளது இயக்குனர்கள் வட்டாரம். விஜய்யிடம் கதை சொல்ல, கால்ஷீட் வாங்க இரண்டு டஜன் இயக்குனர்களாவது காத்திருக்கிறார்கள். அதில் அதிர்ஷ்டத்தின் எல்லைக்கோட்டில் நிற்பவர்கள் மட்டுமே அரை டஜன் இருப்பார்கள்.

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

சசிகுமார், பரதன், மோகன் ராஜா, எஸ்.ஜே.சூர்யா என பல பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. அத்துடன் ஹரி பெயரும் சமீபமாக அடிபடுகிறது. சிங்கம் 3 பட வேலைகளில் இருப்பவர், விஜய்யை வைத்து படம் எடுக்கவும் ஆவலாக இருப்பதாக கூறுகின்றனர்.

அதிர்ஷ்டம் யாரை அடிக்கப் போகிறதோ?

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online