ரஜினியின் ‘கபாலி’ படப்பிடிப்பின் முதல் கட்டம் சென்னையில் நடந்து முடிந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக ரஜினி மலேசியா சென்றுள்ளார்.
அங்கு படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடத்தும் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மலேசியாவில் உள்ள பிரபல முருகன் கோவிலில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 75 சதவீத படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற இருக்கிறது.
ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்பட ஏராளமானோர் நடிக்கிறார்கள்.
இந்த மாதமும் அடுத்த மாதமும் மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. முதலில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்படுகிறது.
இதில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே தவிர மற்ற நடிகர்கள் பங்கேற்கும் காட்சிகள் படமாகிறது. டிசம்பர் மாதம் மத்தியில் ரஜினி ராதிகா ஆப்தே தொடர்பான காட்சிகளை படமாக்க ரஞ்சித் திட்டமிட்டுள்ளார். இப்போதைய திட்டப்படி ராதிகா ஆப்தே டிசம்பரில் மலேசியா செல்கிறார்.
ராதிகா ஆப்தே சென்றதும் ரஜினி மற்ற நடிகர்களுடன் அவர் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்த படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டில் ‘கபாலி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.