வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயம் ரவி

jayam-ravi-5ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘தனி ஒருவன்’. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

தற்போது ஜெயம் ரவி ‘மிருதன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’ படத்தை இயக்கிய விஜய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெயம்ரவி கூறும்போது, “நான் நடித்த தனி ஒருவன் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது நான் சக்திராஜன் இயக்கத்தில் ‘மிருதன்’ படத்தில் நடித்து வருகிறேன்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. மேலும் பிரபுதேவா தயாரிப்பில் லட்சுமணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறேன். இப்படங்களை தவிர நான் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.

புதிய படத்தில் ஒப்பந்தமானால் அதை அதிகாரப்பூர்வமாக நானே அறிவிப்பேன். என்னைப் பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online