ஜீவா தந்த அல்வா… ஜீ.வி.பிரகாஷுக்கு தாவிய ராஜேஷ்

1446553283-8446சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்ரிக் வெற்றியை தந்த ராஜேஷ், அழகுராஜா என்ற ஒரே படத்தில் யாருக்கும் வேண்டாதவராகிவிட்டார்.

கடைசியில் தமிழ் சினிமாவின் தற்போதைய ஆபத்பாந்தவனான ஆர்யாதான் கால்ஷீட் தந்தார். வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற அந்தப் படமும் சுமாராகத்தான் போனது.

இந்தப் படத்தையடுத்து ஜீவா நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தார் ராஜேஷ். ஜீவா இப்போது ராஜேஷ்க்கு வாழ்க்கைதரும் நிலையில் இல்லை. அவருக்கே ஒன்றிரண்டு ஹிட் இருந்தால்தான் பீல்டில் பிடித்து நிற்க முடியும் என்ற நிலை. அதற்கேற்ப கே.வி.ஆனந்தின் படமும் தேடி வந்திருக்கிறது.

இதனால் ராஜேஷ் படத்தில் நடிக்க முடியாது என்று கைவிரிக்க, கடைசியில் ஜீ.வி.பிரகாஷிடம் தஞ்சமடைந்திருக்கிறார்.

ராஜேஷ் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படம் அடுத்த வருட ஆரம்பத்தில் தொடங்குகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries