நானும் ரௌடிதான் டீமை அமுக்கிய ஏ.எம்.ரத்னம்

1446552753-5312ஒரு காலத்தில் யார் ஹிட் கொடுத்தாலும் தேடிச் சென்று அந்த இயக்குனருக்கு பத்து லட்சம் ரூபாய் அட்வான்ஸ் தருவார் ஏ.எம்.ரத்னம்.

அடுத்தப் படத்தை தனது பேனருக்கு இயக்குவதற்காகத்தான் இந்த அட்வான்ஸ். அந்த அல்டாப்பையெல்லாம் ரத்னத்தின் இரு ரத்தினங்களும் காலி செய்து, ரத்னத்தை நடுரோட்டில் விட்டனர். மாதச் சம்பளத்துக்கு வேலைக்குப் போனவரை படம் தந்து மீண்டும் பழைய நிலைக்கு தூக்கிவிட்டார் அஜித்.

அஜித்தின் வேதாளம் படத்தை தயாரித்துவரும் ரத்னம், நானும் ரௌடிதான் டீமை அப்படியே அமுக்கிப் போட்டுள்ளார். தனது ஸ்ரீ சாய் ராம் நிறுவனத்துக்கு படம் பண்ணித்தர கேட்டுள்ளாராம். அவர்களும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

அதேபோல் டிமான்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவும் ரத்னம் நிறுவனத்துக்கே தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார் என்பது முக்கியமானது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online