இது நம்ம ஆளு – சிம்பு செம ஹேப்பி

1446551291-1112இது நம்ம ஆளு படத்தைப் பார்த்த சிம்பு, படம் நன்றாக வந்திருக்கிறது, எதுவும் மாற்ற வேண்டியதில்லை, அப்படியே வெளியிடலாம் என்று கூறியுள்ளார்.

பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு எப்போதோ முடிந்திருக்க வேண்டும். சிம்புவின் கால்ஷீட் சொதப்பல், அவரது தம்பி குறளரசனின் ட்யூன் சொதப்பல் என படம் இழுத்துக் கொண்டே போனது. இந்தப் படத்துக்குப் பிறகு ஒரு படத்தை தொடங்கி முற்றிலுமாக முடித்துவிட்டார் பாண்டிராஜ். இன்னொரு படம் முடியும் நிலையில் உள்ளது.

இது நம்ம ஆளு படத்தின் டப்பிங் முதற்கொண்டு அனைத்தையும் முடித்துவிட்டேன், இனி படத்தை வெளியிட வேண்டியது தயாரிப்பாளரின் கையில் என்று பாண்டிராஜ் ட்வீட் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து நண்பர்களுடன் படத்தைப் பார்த்திருக்கிறார் சிம்பு.

படம் அவருக்குப் பிடித்துள்ளது. படத்தை விரைவில் வெளியிட முயற்சி எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறாராம். சிம்புவின் தந்தை டி.ஆர். படத்தை தயாரித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online