இந்திய சினிமா வரலாற்றிலேயே ‘வேதாளம்’ புதிய சாதனை

1446541815-7182இந்திய சினிமா வரலாற்றிலேயே அஜித்தின் ’வேதாளம்’ திரைப்படம் ஒரு சாதனையை படைக்க உள்ளது.

அஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி, தம்பி ராமையா, ராகுல்தேவ், நான் கடவுள் ராஜேந்திரன் என பெரிய பட்டாளமே நடித்துள்ள திரைப்படமான ’வேதாளம்’ வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி ‘தீபாவளி’ அன்று வெளியாகியாகிறது.

சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அஜித்தின் புதிய கெட்டப் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வேதாளம் திரைப்படம் மேலும் ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறது. அதாவது, வேதாளம் திரைப்படம் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட இந்தியா முழுவதும் வெளியாகும் நவம்பர் 10ஆம் தேதி அன்றே, போலந்து நாட்டிலும் வெளியாகிறது.

ஒரு இந்திய திரைப்படம் போலந்தில் நேரடியாக வெளியாவது, இந்திய சினிமா வரலாற்றில் இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், போலந்து நாட்டிலும் ரசிகர்கள் ‘தல தீபாவளி’யை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

தல வேதாளம் ’தெறி மாஸ்’ தானே..

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online