பிரேமம் தமிழ் ரீமேக்கில் விஜய் சேதுபதி, ஹன்சிகா

1446707210-9807தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்த நானும் ரௌடிதான் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து படம் தயாரிக்கிறார் தனுஷ். ஐஸ்வர்யா தனுஷ் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற பிரேமம் படத்தின் தமிழ் ரீமேக். நேரம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் பிரேமம் படத்தை இயக்கியிருந்தார். நிவின் பாலி சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

இதன் ரீமேக்கை தனுஷ் தயாரிக்க, அவரது மனைவி ஐஸ்வர்யா இயக்குகிறார். விஜய் சேதுபதி, ஹன்சிகா நடிக்கின்றனர். படத்தில் மேலும் இரு நாயகிகள் இருக்கிறார்கள். அவர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online