திருப்பதி கோவிலில் ஆஷ்னா சவேரியுடன் ரகசிய திருமணமா?: சந்தானம் மறுப்பு

hqdefaultதமிழ் பட உலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சந்தானம், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடித்தார். இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக அப்போதே கிசுகிசுக்கள் உலா வர ஆரம்பித்தன.

சந்தானமும், ஆஷ்னா சவேரியும் அதுபற்றி கவலைப்படவில்லை. ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்தார்கள். இந்த நிலையில் சந்தானமும், ஆஷ்னா சவேரியும் திருப்பதி கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இரண்டு பேரும் திருப்பதி கோவில் அருகே ஜோடியாக நடந்து வருவது போல் புகைப்படத்துடன் தகவல் வெளியானது.

ஆனால், இந்த தகவலை சந்தானம் தரப்பில் மறுத்தார்கள். சந்தானம் திருப்பதி கோவிலுக்குள் இருந்ததால், ‘செல்போன்’ மூலம் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. சந்தானம் தரப்பில் கூறப்பட்ட தகவல் வருமாறு:-

‘‘சந்தானம், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் சாமி கும்பிடுவதற்கு திருப்பதி கோவில் சென்றார். அவருடன், ‘இனிமே இப்படித்தான்’ படக்குழுவினர் 14 பேரும் திருப்பதிக்கு சென்றார்கள்.

அந்த குழுவில், ஆஷ்னா சவேரியும் இருந்தார். சாமி கும்பிடத்தான் அவர் வந்திருந்தார். அவருடைய தாயாரும் உடன் இருந்தார். சந்தானத்துக்கும், ஆஷ்னா சவேரிக்கும் காதலும் இல்லை. கல்யாணமும் நடக்கவில்லை.’’

இவ்வாறு சந்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online