தூங்கா வனம் காட்சிகள் ரத்து – ரசிகர்கள் கொந்தளிப்பு

1446802807-3821பிரச்சனையில்லாமல் கமல் படம் வெளியாவதும், மத்திய பிரதேசத்தில் மாட்டுக்கறி வாங்குவதும் ஒன்று. ஏதாவது இடையூறு கண்டிப்பாக இருக்கும் தீபாவளியை முன்னிட்டு பத்தாம் தேதி வெளியாகும் தூங்கா வனத்துக்கும் பல முட்டுக்கட்டைகள்.

பல திரையரங்குகளில் படத்தின் காலைக் காட்சியை ரத்து செய்திருக்கிறார்கள். முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் காட்சி கிடையாது என ரத்து செய்துள்ளனர். இது குறித்து கமல் ரசிகர்கள் இணையத்தில் கொந்தளிப்புடன் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில் ஒன்றை பிஆர்ஓ நிகில் முருகன் பகிர்ந்துள்ளார்.

ஹாய் கமல்யன்ஸ், நான் காலைல ஒரு போஸ்ட் போட்டேன். அதாவது நம்ம ருக்மணி திரை அரங்கத்தில் 10 ஆம் தேதி காலை, 8 மணிக்கு நம்ம தூங்கவனம் சிறப்பு காட்சி முன் பதிவு தொடங்கியது என்று. நான் முன்பதிவு பண்ணிட்டு போஸ்ட் போட்டு விட்டுட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு நிலவரம் செக் பண்ண போய் ஓபன் பண்ணா, அந்த காட்சியே டிக்கெட் நியூ ல காணோம்.

அதுக்கு பதில், அதே டைம் அதே ருக்மணி திரை அரங்கத்தில், வேதாளம் படம் முன்பதிவு ஸ்டார்ட் ஆயிடுச்சு. திரை அரங்கத்தில் விசாரித்தால், தூங்கவனம் சிக்னல் வர தாமதம் ஆகுமாம், அதான் அந்த குறிப்பிட்ட காட்சி ரத்துன்னு சொல்றாங்க. ஆனா அதே டைம் போரூர் கோபால கிருஷ்ணா திரை அரங்கத்துல, 8 மணிக்கு தூங்க வனம் படம் போடறாங்க. இப்போ வரைக்கும் முன் பதிவு நடந்து கிட்டு இருக்கு.

அத எப்போ ஸ்டாப் பண்ணுவாங்கனு தெரியல. காலைல இருந்த காட்சி மதியானம் காணோம். போய் கேட்ட, உங்க பணம் 7 நாளுல வந்துடும், காட்சி ரத்து, போயிட்டு வாங்கன்னு சொல்றானுங்க.

அது எப்படி ஒரு படம் முன் பதிவு ஸ்டார்ட் பண்ணிட்டு அப்பரம் அத ஸ்டாப் பண்ணி, வேற படம் அதே திரை அரங்கத்துல போடுவாங்க? இதான் அரசியலா? எதுக்கு நம்ம தலைவருக்கு மட்டும் இப்படி நடக்குது? நல்லவரா இருக்கறது தப்பா? நல்ல நடிகனா இருக்கறது தப்பா?அரசியல் சாயம் பூசாதது தப்பா? கமல் சார் படம்ணா எங்கிருந்துடா வரீங்க? முடிந்த அளவு இந்த செய்தியை பரப்பவும், தலைவரின் படத்தை காப்பாற்றுவோம், தூங்க வனம் வாழ்க. கமல் ஹாசன் வாழ்க.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries