கபாலியை கண்டுக்காதீங்க – ரஜினி மகள் வேண்டுகோள்

1446796685-9021நேற்று வந்த நடிகர்களே தங்கள் படங்களின் கதை, காட்சி, கெட்டப் என்று எதையும் வெளியே விடுவதில்லை. படவெளியீடு நெருங்கும் நேரம் தவணை முறையில் தகவல்களை வெளியிட்டு டெம்போவை ஏற்றுவார்கள்.

ரஜினி நடிக்கும் படம் என்றால், படப்பிடிப்பு தளத்துக்கு பாதுகாவலர்களைத் தாண்டி வெளிநபர்கள் செல்ல முடியாது. ஆனால், கபாலியில் எல்லாம் தலைகீழ்.

மலேசியாவில் நடந்துவரும் கபாலி படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ரசிகர்கள் மூலமாக உடனுக்குடன் புகைப்படங்களாக இணையத்தில் வந்து கொண்டேயிருக்கின்றன. மலேசியாவில் இங்குபோல் பொதுமக்களை கட்டுப்படுத்த இயலாது என்பதும் ஒரு காரணம்.

இந்தப் புகைப்பட மழையால், கபாலி படத்தில் ரஜினியின் கெட்டப் முதல் காஸ்ட்யூம்வரை அனைத்தும் அனைவருக்கும் அத்துப்படி. இப்படியே போனால் படம் வெளியாகும் போது எந்த சுவாரஸியம் இல்லாமல் போயிவிடும்.

அதனால், கபாலி படத்தின் படங்களை தயவு செய்து பகிராதீர்கள் என்று ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

ரஜினி ரசிகர்களும் ரஜினி மாதிரிதான். ஒரு படம் கிடைச்சா நூறுமுறை ஷேர் பண்ணாம விடமாட்டாங்க.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries