நான் திருமணத்துக்கு தயாராகி விட்டேன்: சுவாதி பேட்டி

swathi-saree-stills-01‘சுப்ரமணிய புரம்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. இந்த படத்தில் இடம்பெற்ற ‘கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் எனை கட்டி இழுத்தாய்’ பாடல் சுவாதியை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. ‘போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். சுவாதிக்கு 28 வயது ஆகிறது. இதனால் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். பொருத்தமான மாப்பிள்ளை பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுவாதி அளித்த பேட்டி வருமாறு:-

‘‘நான் திருமணத்துக்கு தயாராகி விட்டேன். எனது திருமணம் தொடர்பாக என் மனதில் இருக்கும் விஷயங்களை வீட்டில் வெளிப்படையாக பேசி விட்டேன். இதில் எனக்கு எந்த ஒளிவு மறைவும் இல்லை. வெட்கப்படவும் இல்லை. விரைவில் என்னுடைய திருமணம் நடக்கும். திருமணத்துக்கு பிறகு முழு நேர குடும்ப பெண்ணாக மாறி விடுவேன்.

இல்லற வாழ்க்கையில் என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன். நான் சினிமாவுக்கு வந்து 13 வருடங்கள் ஆகிறது. ஆண்டுக்கு ஒரு படத்தில் நடித்தேன். தற்போது தெலுங்கில் பேய் படம் ஒன்றில் நடித்து இருக்கிறேன். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். இதுவரை நான் நடித்துள்ள படங்கள் எனக்கு திருப்தியை தந்துள்ளன.

சினிமாவில் நல்ல இடத்தில் இருக்கிறேன். அப்பா, அம்மாவுடன் சமீபத்தில் நியூயார்க் போய்விட்டு வந்தேன். உலகம் முழுவதும் சுற்றிப்பார்க்க ஆசை இருக்கிறது. புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எனக்கு இருக்கிறது. நிறைய புத்தகங்கள் படித்து உள்ளேன்’’.

இவ்வாறு சுவாதி கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries