இந்தி நடிகருடன் எமிஜாக்சன் காதல்

amy-jackson-read‘மதராச பட்டினம்’ படத்தின் முலம் தமிழ் திலை உலகில் அறிமுகமானவர் எமிஜாக்சன். அதன் பிறகு இந்தி பட உலகிலும் கால் பதித்தார்.

தற்போது தமிழில் விஜய் நடிக்கும் புதிய படம், தனுஷின் தங்க மகன் படங்களில் நடித்து வருகிறார். ரஜினியின் ‘எந்திரன்–2’ படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மும்பையில் தங்கி இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அக்ஷய்குமாருடன் ஜோடி சேர்ந்து ‘சிங் இஸ் பிலிங்’ என்ற படத்தில் எமிஜாக்சன் நடித்து இருக்கிறார். தற்போது இந்தி அறிமுக நடிகர் சூரஜ்பாஞ்சோலியுடன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் எமிஜாக்சனுக்கு சூரஜ்பாஞ்சோலி மிகவும் பிடித்து விட்டதால் அவருடன் மிகவும் நெருங்கிப் பழகுகிறார். சமீபத்தில் தான் அக்ஷய் குமாருடன் நடித்த படத்தை பார்ப்பதற்காக சூரஜ் பஞ்சோலியை தனிப்பட்ட முறையில் அழைத்துள்ளார். சமீபத்தில் சூரஜ் வீட்டின் அருகிலேயே எமிஜாக்சன் வீடு பார்த்து குடியிருக்கிறார். இரண்டு பேரும் அடிக்கடி ஜோடியாக சுற்றுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் எமிஜாக்சன் சூரஜ் பஞ்சோலியை தீவிரமாக காதலிப்பதாக மும்பை பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஏற்கனவே எமிஜாக்சன் இந்தி நடிகரும் மாடலுமான பிரதீக் ஜெயினை விரும்பினார். ஒருவர் பெயரை மற்றவர் கைகளில் பச்சை குத்திக் கொண்டனர். பின்னர் காதல் முறிந்து எமிஜாக்சன் லண்டன் சென்று விட்டார். இந்தி நடிகை ஜியாகன் மர்மச் சாவு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சூரஜ் பஞ்சோலி கைதாகி ஜாமீனில் வந்தவர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் பேசப்படும் எமிஜான்சன்– சூரன் பஞ்சோலி காதல் எந்த அளவு வெற்றி பெறும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online