அஜித்தின் வேதாளம் படத்துடன் மோதும் விஜய்

mankatha movie stills - moviegalleri.in

தீபாவளி அன்று அஜித்தின் வேதாளம் படம் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்துடன் மோத விஜயின் 59 வது படத்தின் பஸ்ட்லுக், டீசர், டைட்டில் வெளியிட இயக்குனர் அட்லீ மற்றும் படக்குழுவினரிடம் விஜய் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் நடித்து வரும் 59 வது படம் சென்னை சுற்றி விறுவிறுப்பாக படப்படிப்பு நடந்து வருகிறது. இந்த படத்திற்கு பெயர் இன்னும் வைக்காதா நிலையில் காக்கி உட்பட பல தலைப்புகள் வெளிவருகிறது. ஆனால் படக்குழுவினர் இன்னும் படத்தின் டைட்டிலை உறுதிசெய்யவில்லை.

இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. அட்லீ இயக்கும் இந்த படத்தில் சமந்தா, எமிஜாக்சன், சத்யராஜ், பிரபு, ராதிகா, கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா உட்பட முன்னனி நடிகர்கள் நடிக்கிறார்கள். மேலும் நடிகை மீனாவின் மகள் நைனிகாவும் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார்.

இந்த படத்திற்கான பாடல்களை விஜயின் சொந்த குரலில் படி இருந்தார். அப்போது பாடல்களை பதிவு செய்யும் போது விஜய், அட்லீ, ஜி.வி பிரகாஷ் அகியோர் இனைந்து செல்பி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தனர்

இந்நிலையில், தீபாவளி அன்று இந்த படத்தின் பஸ்ட்லுக், டீசர், டைட்டில் ஆகியவை வெளியிட படக்குழுவினர் தயாராகி கொண்டு இருக்கின்றனர். ஏனேன்றால், தீபாவளி நாளில் அஜித்தின் வேதாளம் படம் வெளியாக இருக்கிறது.

இந்த நாளில் அஜித் ரசிகர்கள் தங்களுக்கு தல தீபாவளி என்று மகிழ்சியுடன் கொண்டாட உள்ளனர். அதே போல் தீபாவளி தினத்தில் தங்களுடைய தளபதி படத்தின் டீசரும், டைட்டிலும் வெளியாகுமா என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

தனது ரசிகர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் ஏற்பாடுகளை செய்யும் படி இயக்குனர் அட்லீ மற்றும் படக்குழுவினரிடம் விஜய் கேட்டுக்கொண்டார்.

விஜய் கேட்டுக்கொண்டதன் படி படக்குழு நிறைவேற்றுமா என்பதை தீபாவளியன்று பார்க்கலாம். அதுபோல் வேதாளத்துடன் எந்த அளவிற்கு இந்த புலி பாயும் என்பதை அஜித் ரசிகர்களும் பொறுத்து இருந்து பார்க்கலாம்

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online